தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 'பஸ் பாஸ்' மாணவர்கள் பட்டியல் அக்., 14க்குள் இறுதி செய்ய கெடு

'பஸ் பாஸ்' மாணவர்கள் பட்டியல் அக்., 14க்குள் இறுதி செய்ய கெடு

'பஸ் பாஸ்' மாணவர்கள் பட்டியல் அக்., 14க்குள் இறுதி செய்ய கெடு


UPDATED : அக் 05, 2026 02:08 PM

ADDED : அக் 05, 2026 02:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:08 PM ADDED : அக் 05, 2026 02:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
'பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச 'பஸ் பாஸ்' பெற தகுதியான மாணவர்களின் முழு விபரங்களையும், அக்., 14ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதில் மாணவரின் புகைப்படம், பெயர், முகவரி, கியூ.ஆர்., குறியீடு, புறப்படும் இடம், சேரும் இடம், கல்வி நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெறும்.

கல்வியாண்டு தொடங்கியதும், ஜூன் இரண்டாவது வாரத்தில் பஸ் பாஸ் பணிகள் தொடங்கின. தற்போது 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் பஸ் பாஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலம் முழுதும், 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது வரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிபரம், புகைப்படம், புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் மற்றும் பஸ் பாஸ் பெற விருப்பம் உள்ளதா, வேண்டாமா என்பதையும் உறுதி செய்து, தகுதியான பயனாளிகள் பட்டியலை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளிக்கு முன்பாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us