UPDATED : நவ 05, 2025 07:46 AM
ADDED : நவ 05, 2025 07:47 AM
கோவை:
முத்துாஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான முத்துாஸ் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் முதல் நர்சிங் கல்லுாரி தொடக்க விழா, மதுக்கரையில் நடந்தது.
முத்துாஸ் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் முத்து சரவணகுமார் மற்றும் அறங்காவலர் பிரேமா தலைமை வகித்தனர். கோவை மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் அருண் பரத், கோவை தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், இணை இயக்குனர் அஸ்வத் பாஜி, கல்வி ஆர்வலர் அசோக் குமார் ஆகியோர், செவிலியர் கல்லுாரியை துவக்கி வைத்தனர்.
புதிய நர்சிங் கல்லுாரி திறக்கப்பட்டதன் மூலம், கோவை நகரில் மேலும் ஒரு முக்கிய கல்வி மையம் உருவாகியுள்ளதாக, நிர்வாக அறங்காவலர் டாக்டர் முத்து சரவணகுமார் தெரிவித்தார். முத்துாஸ் நர்சிங் கல்லுாரி நிர்வாக அலுவலர் டாக்டர் இந்திரா, முதல்வர் ஜெஸ்சி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

