தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த வாரம் விண்வெளியில் நடைபயணத்திற்கு நாசா வீரர்கள் ஆயத்தம்

அடுத்த வாரம் விண்வெளியில் நடைபயணத்திற்கு நாசா வீரர்கள் ஆயத்தம்

அடுத்த வாரம் விண்வெளியில் நடைபயணத்திற்கு நாசா வீரர்கள் ஆயத்தம்


UPDATED : ஜூன் 26, 2026 11:12 AM

ADDED : ஜூன் 26, 2026 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 11:12 AM ADDED : ஜூன் 26, 2026 11:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்துள்ள 'கனடார்ம்2' ரோபோடிக் கையின் மணிக்கட்டுப் பகுதியை பழுதுபார்ப்பதற்காக, நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த வாரம் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

இந்த விண்வெளி நடைபயணம் ஜூன் 30ம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 06:05 மணி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடிக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் போது, விண்வெளி வீரர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் விண்வெளி நிலையத்தின் முக்கியக் கருவியான 'கனடார்ம்2'ல் பழுதடைந்துள்ள மணிக்கட்டுப் பகுதியை மாற்ற இருக்கின்றனர். இதற்கான மாற்று மணிக்கட்டுப் பகுதி ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தயாராக உள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான கிறிஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெசிகா மேயர் ஆகியோர் அடுத்த வாரம் விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கான ஒத்திகையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us