தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தி.மு.க., ஆட்சியில் வசூல் தனியார் பள்ளி சங்கம் ஒப்புதல்

தி.மு.க., ஆட்சியில் வசூல் தனியார் பள்ளி சங்கம் ஒப்புதல்

தி.மு.க., ஆட்சியில் வசூல் தனியார் பள்ளி சங்கம் ஒப்புதல்


UPDATED : ஜூன் 26, 2026 11:11 AM

ADDED : ஜூன் 26, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 11:11 AM ADDED : ஜூன் 26, 2026 11:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க, மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, மத்திய கல்வி வாரியத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். அவர்கள் மாநில அரசுக்கு, 30 நாளில் விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்குவர்.

அதற்குள் மாநில அரசு பதில் அளிக்காவிட்டால், 15 நாளில் விளக்கமளிக்குமாறு, இரண்டாவது நோட்டீசும், தவறும் பட்சத்தில் நேரடி அனுமதி அளிக்கப்படும் என்றும் வலியுறுத்தப்படும்.

ஆனால், இது நடக்காமல் தமிழக அரசு, பள்ளிகளை மிரட்டி, அனுமதிக்கு இழுத்தடித்து, எங்களிடம் அனுமதி வாங்கியே ஆக வேண்டும் என, கட்டாயப்படுத்தியது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளை நடத்த, மாவட்ட அலுவலகம் முதல் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் வரை, பணம் செலவு செய்ய நேரிட்டது.

தற்போதைய, தமிழக வெற்றிக் கழக அரசு, அந்த முறையை ஒழித்து தகுதியான, 1,000 தனியார் பள்ளிகளுக்கு உடனடி அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், யாரும் பள்ளி அனுமதிக்கு பணம் கேட்டால், புகார் அளியுங்கள் எனக் கூறியதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளிகள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் சிலர் கூறுகையில், “கடந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில் ஆயிரக்கணக்கான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசின் தடையில்லா சான்றிதழை பெற, பல லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தனர்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி அனுமதி நீட்டிப்புக்கு ஒரு விலை, பள்ளி அனுமதிக்கு ஒரு விலை, தடையில்லா சான்றுக்கு ஒரு விலை என வைத்து, தி.மு.க.,வினர் அநியாய வசூல் செய்தனர்,” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us