அணு மற்றும் பிளாஸ்மா இயற்பியல் புதுச்சேரி கல்லுாரியில் தேசிய மாநாடு
அணு மற்றும் பிளாஸ்மா இயற்பியல் புதுச்சேரி கல்லுாரியில் தேசிய மாநாடு
UPDATED : மார் 16, 2026 04:35 PM
ADDED : மார் 16, 2026 04:37 PM

புதுச்சேரி:
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அணு மற்றும் பிளாஸ்மா இயற்பியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த தேசிய மாநாடு நடந்தது.
மத்திய அரசின், ரஷ்யா திட்ட நிதி உதவியுடன் நடந்த மாநாட்டை கல்லுாரி இயக்குனர் சசிகாந்ததாஸ் துவக்கி வைத்தார். இயற்பியல் துறைத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சுரஜ் குமார் சின்ஹா, 'பிளாஸ்மா மெட்டல் சந்திப்பு, தொழில்நுட்பம் மூலம் அதிவேகச் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். இயற்பியல் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இயற்கை உரங்கள், உலக அளவில் வேளாண்மைத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக, ஆராய்ச்சிகள் பல்கலைக் கழகத்தில் நடந்து வருகின்றன' என்றார்.
அணு இயற்பியலின் முக்கியத்துவம் குறித்து, பேராசிரியர் பீர் பிக்ரம் சிங், புதிய மூலக்கூறுகளை உருவாக்குவதற்கும், பிரபஞ்சத்தின் மர்மங்களைப் புரிந்து கொள்வதற்கும் அணு இயற்பியல் ஆராய்ச்சி அவசியம் குறித்து விளக்கினார்.
விழாவில், மாணவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் திட்ட மாதிரிகளை முன்வைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இணைப் பேராசிரியர் பெரியாண்டி நன்றி கூறினார்.

