தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.வி., தேசிய சைபர் பாதுகாப்பு போட்டியில் முதலிடம்

வி.வி., தேசிய சைபர் பாதுகாப்பு போட்டியில் முதலிடம்

வி.வி., தேசிய சைபர் பாதுகாப்பு போட்டியில் முதலிடம்


UPDATED : ஏப் 25, 2026 01:08 PM

ADDED : ஏப் 25, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2026 01:08 PM ADDED : ஏப் 25, 2026 01:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில் தேசிய அளவில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு போட்டியில் சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நடந்த சைபர் செக்யூரிட்டி இன்னோவேஷன் சேலஞ்ச் போட்டியை, டேட்டா செக்யூரிட்டி கவுன்சில் ஆப் இந்தியா, நாஸ்காம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தின.

இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர் வெங்கடேஷ், 'தனியுரிமை காக்கும் கே.ஒய்.சி., சரிபார்ப்பு அமைப்பு' என்ற திட்டத்தை சமர்ப்பித்து முதல் பரிசை வென்றார். மாணவருக்கு, ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம், கிரிப்டோகிராபிக் நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான அடையாளச் சரிபார்ப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவரை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி, வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us