தேசிய கல்விக் கொள்கை 2020: பிரதமர் மோடி பகிர்ந்த கட்டுரை
தேசிய கல்விக் கொள்கை 2020: பிரதமர் மோடி பகிர்ந்த கட்டுரை
UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 09:25 AM
சென்னை:
தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியக் கல்வி அமைப்பை முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியமைத்துள்ளது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
கல்வி அமைச்சகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், தனது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு வேர்களில் இருந்து மாற்றியமைத்துள்ளது என்பதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்குகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வகுப்பறை நிலைத் தாக்கங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு 2020ம் ஆண்டு கொண்டுவந்த கல்விக் கொள்கை, பாடத்திட்ட சீரமைப்பு, மொழிப் பயிற்சி, திறன்கள் மேம்பாடு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் உயர்கல்வி அளவுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தது. இக்கொள்கையின் தாக்கம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரதமரின் இந்தக் கருத்துகள், கல்விக் கொள்கையின் 5 ஆண்டு நிறைவை முன்னிட்டு முக்கியத்துவம் பெறுகின்றன.

