UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 09:52 AM
கோவை:
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில், தேசிய அறிவியல் தினவிழா, நேற்று கல்விநிறுவன அரங்கில் கொண்டாடப்பட்டது.
அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்ப, இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளில் நிகழ்வு நடந்தது. துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்து, நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
சென்னை இந்திய அறிவு அமைப்பு மையத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியன் பங்கேற்று, நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பத்தின் பங்களிப்பு. ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளின் அவசியங்கள் குறித்து பேசினார்.
இதில், இன்போகிராபி, ஸ்பெல் பீ, வினாடி வினா, கண்டுபிடிப்பு யோசனைகள், நாட்டுப்புற கலை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் மாதிரி படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில், அவினாசிலிங்கம் பதிவாளர் இந்து, டீன் பத்மாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.