UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 09:51 AM
கோவை:
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், ஐடியா லேபில் இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திகேயன், வான்வெளி மண்டல அடுக்குகளை ஆராய்ச்சி செய்வதற்காக, ஒன்யூகியூபிக் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார்.
இச்செயற்கைக்கோள் கடல்மட்டத்திலிருந்து வான்வெளியில் சுமார், 15 முதல் 20 கி.மீ., தூரம் வரையில் நிலைநிறுத்தக்கூடிய வகையில் சுமார், ஒன்பது வகையான சென்சார்களைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்.
இச்செயற்கைக்கோள் மூலம், வான்வெளியில் ஏற்படக்கூடிய வெப்பநிலையில் மாற்றம், அழுத்தம் மற்றும் அடர்த்தி, காந்தப்புலம் ஆகியவற்றை துல்லியமாக அளவிடும் படியாக உருவாக்கியுள்ளார். கல்லூரியின் தாளாளர் சரஸ்வதி, செயலாளர் பிரியா, ஐடியா லேப் முதன்மை ஆலோசகர் ஜெயா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோகிலாவாணி மற்றும் பேராசிரியர்கள் மாணவரின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டினர்.