தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்: அறிவித்தது ஐ.எம்.ஏ.,

நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்: அறிவித்தது ஐ.எம்.ஏ.,

நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்: அறிவித்தது ஐ.எம்.ஏ.,


UPDATED : ஆக 16, 2024 12:00 AM

ADDED : ஆக 16, 2024 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2024 12:00 AM ADDED : ஆக 16, 2024 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (ஆகஸ்ட் 17) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் ஐ.எம்.ஏ., அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ., விசாரணை
கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக அந்தக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு படி, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 15) கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கினர்.
ஸ்டிரைக்
இந்நிலையில், ''ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும். விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர மற்ற எந்த மருத்துவ சேவைகளும் செயல்படாது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசு அதிகாரிகளின் பொறுப்பு'' இந்திய டாக்டர்கள் சங்கம் ( ஐ.எம்.ஏ.,) அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us