தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,

நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,

நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,


UPDATED : மார் 10, 2026 12:16 PM

ADDED : மார் 10, 2026 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 12:16 PM ADDED : மார் 10, 2026 12:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நீதித்துறை தொடர்பாக இடம்பெற்று இருந்த 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாபஸ் பெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், நவோதயா, பி.எம்., ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசின் பாடத்திட்டங்கள் உள்ள பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலின் புத்தகங்களை பயன்படுத்துகின்றன.

8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில், புதிய பாடப்புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., சமீபத்தில் வெளியிட்டது. அதில், 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்று இருந்தது. இதில் வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற சவால்களுடன், நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழலும் ஒரு சவாலாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாடப்புத்தகத்தில், 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்ற விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. பாடப்புத்தகம் குறித்து சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனங்களை தெரிவித்தது. பள்ளி மாணவர்களிடம் நீதித்துறை ஊழல்கள் குறித்து கற்பிப்பது, ஆழமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை போல தெரிகிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்தது. அந்த வகையில் இன்று 8ம் வகுப்பு புதிய பாடப் புத்தகத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) திரும்ப பெற்றது. பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம்பெற்று இருந்ததுக்கு என்.சி.இ.ஆர்.டி., நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us