நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது: சீமான்
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது: சீமான்
UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:12 PM
சென்னை:
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும்?
வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. தமிழகத்தில்தான் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர்.
சின்ன மூக்குத்தியில் கூட பிட் அடிப்பார்கள் என சொல்லி கழற்ற சொல்கிறார்கள்; ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர்களே சொல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.