sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

/

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : பிப் 11, 2026 02:13 PM

ADDED : பிப் 11, 2026 02:15 PM

Google News

UPDATED : பிப் 11, 2026 02:13 PM ADDED : பிப் 11, 2026 02:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
'நீட்' தேர்வுக்கு தகுதியானவர்கள் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேசிய தேர்வு முகமை சார்பில், ஆண்டு தோறும் மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வினை நடத்தி வருகிறது. தற்போது 2026ம் ஆண்டுக்கான இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவித்துள்ளது.

அதன் அறிவிப்பின்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் இணைய, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'நீட்' தேர்வு மே, 3ம் தேதி, மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் பிப். 8 துவங்கி, மார்ச், 8ம் தேதி வரை விண்ணப்பிக்க, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவுறுத்தியுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர், 1,700 ரூபாயும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாயும், பிற வகுப்பினர், 1,600 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. htttps://nta.ac.in என்ற இணையதளத்தில் மேலும் தகவல்களை விண்ணப்பிப்போர் அறியலாம்.

இத்தகவலை, திருப்பூர் மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us