sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM

ADDED : ஜூலை 20, 2024 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM ADDED : ஜூலை 20, 2024 12:42 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை இன்று(ஜூலை 20) வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தன் மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர்? எந்த தேர்வு மையங்களில் அல்லது நகரங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது. இதனால், மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை, இன்று (ஜூலை 20) மதியம் 12:00 மணிக்குள் என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

வெளியீடு

அதன்படி, இன்று தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதன் வாயிலாக, எந்தெந்த தேர்வு மையங்கள் அல்லது நகரங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us