UPDATED : ஜூலை 11, 2024 12:00 AM
ADDED : ஜூலை 11, 2024 10:21 AM

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ள 13 புதிய படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.
படிப்புகள்:
எம்.பி.ஏ., - கட்டுமான மேலாண்மை
எம்.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., - அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., - ஹெல்த்கேர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்
எம்.ஏ., - கீதை
எம்.எஸ்சி.,- ஹோம் சயின்ஸ்
மேலும், புனர்வாழ்வு உளவியலில் முதுநிலை பட்டயப் படிப்பு, பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மையில் முதுநிலை பட்டயப் படிப்பு, பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிவுசார் ஊனமுற்றோருக்கான சேர்க்கையை செயல்படுத்தும் ஆரம்பக் குழந்தைப் பருவ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தகுதிகள்:
முதுநிலை படிப்புகளில் சேர்க்கை பெற, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
ignouadmission.samarth.edu.in