'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்!
'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்!
UPDATED : ஜன 13, 2026 11:08 AM
ADDED : ஜன 13, 2026 11:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவர் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பதிவு விரைவில் துவங்க உள்ளது. முதல் வாரத்தில் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை, தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் இயங்கும் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் வடிவமைக்கிறது.
அது சமீபத்தில் இயற்பியல், வேதியல், உயிரியல் ஆகியவற்றில் மாற்றி அமைந்துள்ள புதிய பாடத்திட்டத்தை, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகிய இணையதளங்களில் பதிவேற்றியுள்ளது.
இதை https://nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in/ ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

