தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிப்ட்-டீ கல்லுாரியில் பகுதி நேர வகுப்பு: மாணவருக்கு அழைப்பு

நிப்ட்-டீ கல்லுாரியில் பகுதி நேர வகுப்பு: மாணவருக்கு அழைப்பு

நிப்ட்-டீ கல்லுாரியில் பகுதி நேர வகுப்பு: மாணவருக்கு அழைப்பு


UPDATED : மார் 03, 2026 03:06 PM

ADDED : மார் 03, 2026 03:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 03:06 PM ADDED : மார் 03, 2026 03:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லூரி பயிற்சி மையத்தில், 25 வார கால 'அப்பரேல் பேஷன் டிசைனிங்' மற்றும் 'அப்பரேல் மெர்ச்சண்டைசிங் குவாலிட்டி கண்ட்ரோல்' பயிற்சி துவங்கியுள்ளது.

'நிப்ட்-டீ' கல்லூரி மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து, பின்னலாடை தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி, 2026ம் ஆண்டுக்கான, 25 வாரகால பயிற்சிகள் துவங்கியுள்ளன. 'அப்பரேல் பேஷன் டிசைனிங்' மற்றும் 'அப்பரேல் மெர்ச்சண்டைசிங் குவாலிட்டி கண்ட்ரோல்' என, இரண்டு பயிற்சிகள் துவங்கியுள்ளன. கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன், பகுதி நேர பயிற்சி மைய இயக்குனர் மணியன் ஆகியோர், பயிற்சியை துவக்கி வைத்தனர்.

பகுதி நேர பயிற்சி மைய இயக்குனர் கூறியதாவது:


'டிசைனர்', 'மெச்சண்டைசர்', 'பேட்டன் மேக்கர்' ஆகிய துறைகளில் அதிகப்படியான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வாயிலாக, 'நிப்ட்-டீ' கல்லூரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பகுதி நேர பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. அதன்படி, 2026ம் ஆண்டுக்கான அனைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 95979 14182 மற்றும் 78451 84962 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us