தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிப்பு


UPDATED : அக் 07, 2025 05:23 PM

ADDED : அக் 07, 2025 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2025 05:23 PM ADDED : அக் 07, 2025 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாக்ஹோம்:
இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில் கடந்த 1901ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது.இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி , பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க பதக்கம், பட்டயம், பணப்பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 ல் வழங்கப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர்கள் அறிவிப்பு நேற்று துவங்கியது. இதில், முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.இந்த விருதானது விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மைக்கேல் டிவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூன்று பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us