UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 01:19 PM
திமர்பூர்:
கல்வி கட்டணத்தை தனியார் பள்ளி நிர்வாகங்கள் தன்னிச்சையாக உயர்த்தியதாக பெற்றோர் சரமாரியாக புகார்கள் தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்களை மாநில கல்வித்துறை அமைத்துள்ளது. இந்த குழுக்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
இதுவரை 600 தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, 10க்கும் மேற்பட்ட நிர்வாகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆய்வின்போது, இதுவரை 20 போலி பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.