UPDATED : நவ 05, 2024 12:00 AM
ADDED : நவ 05, 2024 08:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
கலைமாமணி ராஜேந்திரன் எழுதிய ஏங்கும் நெஞ்சங்கள் நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.
தமிழ்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். எழுத்தாளர் ராமஜெயம் வரவேற்றார். தமிழ்மாமணி துரை மாலிறையன், பூங்கொடி பராங்குசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் நீதிபதி முத்துவேல் நுாலை வெளியிட்டார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நுாலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அருட் தந்தை அந்தோணிசாமி கருத்துரை வழங்கினார். முனைவர் வேல்முருகன், பேராசிரியர் ராஜன் ஆகியோர் நுால் ஆய்வுரையாற்றினர். விழாவில், தமிழ்மாமணி உசேன், அசோகா சுப்ரமணியன், குலசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலைமாமணி விஜயலட்சுமி நன்றி கூறினார்.