தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்


UPDATED : மார் 06, 2026 01:25 PM

ADDED : மார் 06, 2026 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 01:25 PM ADDED : மார் 06, 2026 01:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:
குளித்தலை அடுத்த தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பாக, நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

சேவாப்பூரில் அமைந்துள்ள மரபியல் தாவரவியல் தோட்டத்தில், நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர், கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியின் தலைமையில் பார்வையிட்டனர்.

ஒருங்கிணைப்பாளரும், கல்லுாரி வணிகவியல் துறை தலைவருமான பத்மநாபன் மேற்பார்வையில் அங்குள்ள மூலிகை செடிகள், மரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகளை பற்றி மாணவ மாணவியர் கேட்டறிந்தனர்.

இதே போல் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உருவாக்கப்பட்டுள்ள வானகத்திற்கு சென்றனர். அங்குள்ள இயற்கை வேளாண் காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட மரங்கள், செடிகள் மற்றும் பழ வகைகளின் செடிகளின் நன்மைகள், இயற்கை முறையில் மரங்கள், செடிகளை வளர்க்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

கல்லுாரி நிதியாளர் கோவிந்தசாமி, கண்காணிப்பாளர் ரம்யா, அறக்கட்டளை நிர்வாகி செல்வம் உள்பட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us