UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தலில் வாக்குறுதியளித்ததின் அடிப்படையில், ஓய்வூதியமாக மாதம் தோறும் 6,750 ரூபாய் வழங்க வேண்டும், நீதியரசர் பட்டு தேவானந்தா தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார், மாவட்ட நிர்வாகிகள் தமிழரசி, சாந்தகுமாரி, வெங்கிட்டான் ஆகியோர், முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடசுப்ரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார்.

