UPDATED : ஆக 21, 2024 12:00 AM
ADDED : ஆக 21, 2024 10:58 AM

கல்வியில் சிறந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியரது உயர்கல்விக்கு உதவும் வகையில், ஓ.என்.ஜி.சி., அறக்கட்டளை ஆண்டுதோறும் உதவித்தொகையை வழங்கி வருகிறது.
படிப்புகள்:
பொறியியல், மருத்துவம் போன்ற புரொபஷனல் படிப்புகள் மற்றும் மேலாண்மை, ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ் போன்ற துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒ.என்.ஜி.சி., மெரிட் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை விபரம்:
தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 48 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் என 2 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மொத்த உதவித்தொகை எண்ணிக்கையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
தகுதிகள்:
* 2024-25ம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
* இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் 12ம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றவர்கள் அவர்களது இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* முழுநேர படிப்பாக கல்லூரியில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
* குடும்ப ஆண்டு வருமானம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுகு ரூ. 4.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர்களது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* அதிகபட்ச வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2024ன் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://ongcscholar.org/#/schemeAndRules/apply எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை சான்றிதழ், புகைப்படம், ஜாதி சான்றிதழ், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி ஐ.டி., அட்டை, பிளஸ் 2 அல்லது இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 18
விபரங்களுக்கு:
https://ongcscholar.org