UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:11 AM
சென்னை:
இஸ்கான் சார்பில் பகவத் கீதை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வகையில், கீதா மகாத்மியம் எனும் தலைப்பில், ஏழு நாட்கள் இலவச ஆன்-லைன் வகுப்பு நடக்கிறது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனும் இஸ்கான் சார்பில், ஆன்மிக மற்றும் நாட்டு நலத்திற்கு ஏற்றவகையில், பல்வேறு பயிற்சிகளை இலவசமாக தொடர்ந்து போதித்து வருகிறது.
மேலும், கோடை கால சிறப்பு இலவச பயிற்சிகளும் நடத்துகிறது.
அந்த வகையில், நாளை முதல், 28ம் தேதி வரை, கீதா மகாத்மியம்' எனும் தலைப்பில் ஸ்ரீமத் பகவத் கீதையை படிப்பதன் வாயிலாக ஏற்படும் நன்மைகள் குறித்து போதிக்கப்படுகிறது.
ஏழு நாள் தினமும் இரவு, 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஆங்கிலம், தமிழ் மொழியில் பி.பி.டி., விளக்க காட்சியுடன் ஜூம் சந்திப்பில் நடத்தப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தகவல்களுக்கு 73585 11132 என்ற, வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இஸ்கான் கோவில் நிர்வாகி ரங்ககிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.