UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:10 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில், பாரதிதாசன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் மற்றும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பாரதி பூங்கா அருகில் உள்ள அவரது சிலைக்கு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் பாரதிதாசனின் பேரன் பாரதி மற்றும் தமிழ் அறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றம் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில், மலர் அஞ்சலி மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. பாரதிதாசன் பாடல்களை பாடி, இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.