தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தகுதி தேர்வு; ஆன்லைன் பயிற்சி

ஆசிரியர் தகுதி தேர்வு; ஆன்லைன் பயிற்சி

ஆசிரியர் தகுதி தேர்வு; ஆன்லைன் பயிற்சி


UPDATED : மார் 16, 2026 04:29 PM

ADDED : மார் 16, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2026 04:29 PM ADDED : மார் 16, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோர்ட் உத்தரவுப்படி தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் திரிலோக சந்திரன், கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து விளக்கினார்.

நிர்வாகிகள் கூறுகையில், “தினமும் சரியாக மாலை 06:00 மணிக்கு பயிற்சி துவங்கும். இதில் மொத்தம் 120 வகுப்புகள் பாடவாரியாக நடைபெறும். கல்வி வல்லுனர்கள் இதில் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இதில் 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பயிற்சியில் இணையலாம். ஜூம் மீட்டில் இணைய ஐடி '858 8074 9922'. கடவு எண் 1234. மேலும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் யூடியுப் சேனலிலும் இணையலாம்” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us