தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருக்குறள் போட்டியில் சிறப்பிடம்; பள்ளி மாணவியருக்கு பாராட்டு

திருக்குறள் போட்டியில் சிறப்பிடம்; பள்ளி மாணவியருக்கு பாராட்டு

திருக்குறள் போட்டியில் சிறப்பிடம்; பள்ளி மாணவியருக்கு பாராட்டு


UPDATED : மார் 16, 2026 04:30 PM

ADDED : மார் 16, 2026 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2026 04:30 PM ADDED : மார் 16, 2026 04:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு எக்ஸல் பதிப்பகம் சார்பில், திருக்குறள் பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை, 61 மாணவ, மாணவியர் எழுதினர்.

இதில், 6 பேர் மாவட்ட அளவில் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். எட்டாம் வகுப்பு மாணவி சூர்யபாலா, ஏழாம் வகுப்பு மாணவி, தன்ஷிகா, திருக்குறள் போட்டியில், மாநில அளவில், 2, 3 இடம் பிடித்தனர்.

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், பரிசு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us