தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு: தேசிய கட்டமைப்பு பணிகள் தீவிரம்

ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு: தேசிய கட்டமைப்பு பணிகள் தீவிரம்

ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு: தேசிய கட்டமைப்பு பணிகள் தீவிரம்


UPDATED : அக் 01, 2026 09:51 AM

ADDED : அக் 01, 2026 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 09:51 AM ADDED : அக் 01, 2026 09:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இளநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை பேனா மற்றும் பேப்பர் முறையில் இருந்து, கணினி வழித் தேர்வு முறைக்கு மாற்றும் பிரத்யேக தேசிய கட்டமைப்பு திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது, நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், அடுத்த ஆண்டு முதல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தற்போது அதற்கான பிரத்யேக தேசிய கட்டமைப்பு திட்டத்தை உருவாக்கும் பணியில் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயம், நாட்டின் அனைத்து தேர்வு முறைகளிலும் உள்ள குளறுபடிகளை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட, 'இன்போசிஸ்' இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைத்ததும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இளங்கலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு, நாட்டின் பல்வேறு பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வு, உதவி பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகையை பெறுவதற்கான யு.ஜி.சி., தகுதி தேர்வுகள், 'ஆன்லைன்' எனப்படும், இணைய வழியில் ஏற்கனவே நடத்தப்படுகின்றன.

'நீட்' தேர்வையும், அதே பாணியில் நடத்த வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

கிராமப்புற மற்றும் குறைந்த இணைய இணைப்பு கொண்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையால், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us