தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எதிர்காலத்திற்காக உழைப்பதற்கு பெயர் தான் லட்சியம்!

எதிர்காலத்திற்காக உழைப்பதற்கு பெயர் தான் லட்சியம்!

எதிர்காலத்திற்காக உழைப்பதற்கு பெயர் தான் லட்சியம்!


UPDATED : செப் 30, 2026 06:14 PM

ADDED : செப் 30, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 06:14 PM ADDED : செப் 30, 2026 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
“நம் சிறப்பான எதிர்காலத்திற்காக, இப்போதிலிருந்து இடைவிடாமல் உழைப்பதற்கு பெயர் தான் லட்சியம்,” என, உயர்கல்வி துறை செயலர் தீரஜ்குமார் பேசினார்.

சென்னை பல்கலையின், 170வது ஆண்டு விழா, அதன் செனட் ஹவுசில் நடந்தது. அதில், 'லெகசி 170' என்ற லோகோவை, உயர்கல்வி துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டார்.

அவர் பேசியதாவது:


தென் மாநில பல்கலைகளின் தாயான சென்னை பல்கலையில் படிக்கும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதன், 170வது ஆண்டு விழா என்பது, வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும்.

அதன் பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பு, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது.

நீங்கள் கனவு காணுங்கள். உயர உயர இன்னும் உயரமான கனவுகளை காணுங்கள். நம்மால் ஒருபோதும் கடந்த காலத்திற்கு செல்ல முடியாது. ஆனால், நாளை என்பதை, இன்றைய கடின உழைப்பால் நம் வசமாக்க முடியும்.

ஒழுக்கம் உங்கள் ஆயுதமாக இருக்கட்டும். அதை மற்றவர்களுக்கானதாக இல்லாமல், உங்களின் சுய சொத்தாக இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் பேசுகையில், “பல்கலையில் 170வது ஆண்டு விழா ஓராண்டுக்கு நடத்தப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கண்காட்சிகள், போதைப்பொருள் ஒழிப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு, கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us