UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :
புதுச்சேரி ஒயிட் டவுன் எவேச் வீதியில் கிளிக் ஆர்ட் கேலரியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி ஒயிட் டவுன் எவெச் வீதியில் புதிய கிளிக் ஆர்ட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் , முதல்வர் ரங்கசாமி புதிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கிளிக் ஆர்ட் மியூசியம் நிறுவனர் ஸ்ரீதர், ரூபா லாரன்ஸ் முன்னிலை வகித்தனர். திறப்பு விழா குறித்து ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதர் கூறுகையில், கிளிக் ஆர்ட் மியூசியத்தில் முப்பரிமாண டிரிக் ஆர்ட் மியூசியம். இது புதுச்சேரியில் முதன் முதலாக திறக்கப்பட்டுள்ளது.
மியூசியத்தில் சுவர்களில் வரையப்பட்டுள்ள 3டி பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவத்தை வழங்கும். கேலரியை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றார்.