தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆப்பரேஷன் சிந்துார் கட்டுரை போட்டி அறிவிப்பு

ஆப்பரேஷன் சிந்துார் கட்டுரை போட்டி அறிவிப்பு

ஆப்பரேஷன் சிந்துார் கட்டுரை போட்டி அறிவிப்பு


UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM

ADDED : ஜூன் 02, 2025 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM ADDED : ஜூன் 02, 2025 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஆப்பரேஷன் சிந்துார் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பதிலடி நடவடிக்கையை, நம் பாதுகாப்பு படையினர் கடந்த மாதம் 7ம் தேதி நடத்தினர். இதன் தாக்கத்தை இளைஞர்கள் உணர்ந்து கொள்ளும் நோக்கத்தில், ராணுவ அமைச்சகம் சார்பில், ஆப்பரேஷன் சிந்துார் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியை நம் ராணுவ அமைச்சகம் நடத்துகிறது.

போட்டியாளர்கள், தங்கள் கட்டுரையை, 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கும்படியும், ஹிந்தி அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே எழுத வேண்டும்.

இக்கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், தேர்வு செய்யப்படும் முதல் 200 பேர் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருடன், டில்லி செங்கோட்டையில் நடக்கும், 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us