விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு
விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு
UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 10:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பிழை ஏற்படாமல் இருக்க மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தேர்வுத்துறை வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவக்கி ஏப். 15 வரை நடக்கிறது. மாணவர்கள் தங்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 14 மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவர்கள் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவை குறித்த திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ள அரசு தேர்வுத்துறை வாய்ப்பு அளித்துள்ளது. மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.