தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி ஆசிரியர்கள் 3வது மொழி கற்க வாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்கள் 3வது மொழி கற்க வாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்கள் 3வது மொழி கற்க வாய்ப்பு


UPDATED : மே 01, 2026 11:01 AM

ADDED : மே 01, 2026 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 11:01 AM ADDED : மே 01, 2026 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அமலாகி உள்ளது.

அதற்கேற்ப, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமான சி.ஐ.ஐ.எல்., அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, 150 ரூபாய் கட்டணத்தில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள, ஏதேனும் ஒரு இந்திய மொழியில், டிப்ளமோ படிப்பை கற்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வரும் ஜூலை 6ம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்கும். இதற்காக ஏழு இடங்களில் செயல்படும் மண்டல மையங்களில், மூன்றாவது மொழி கற்பிக்கப்பட உள்ளது.

மைசூரில் உள்ள கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட உள்ளன. இந்த தகவலை, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் சி.ஐ.ஐ.எல்., சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us