UPDATED : ஜன 08, 2026 03:58 PM
ADDED : ஜன 08, 2026 04:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,
தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
உரிய மருத்துவ காரணங்கள் இல்லாமல், தொடக்கக்கல்வி இயக்கக ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்கக் கூடாது. தற்போது, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வேலையில்லை; ஊதியமில்லை என்ற விதிப்படி, சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

