sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பச்சையப்பன் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் மறுப்பு

/

பச்சையப்பன் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் மறுப்பு

பச்சையப்பன் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் மறுப்பு

பச்சையப்பன் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் மறுப்பு


UPDATED : ஏப் 17, 2025 12:00 AM

ADDED : ஏப் 17, 2025 12:15 PM

Google News

UPDATED : ஏப் 17, 2025 12:00 AM ADDED : ஏப் 17, 2025 12:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்லுாரிகளில் நியமிக்கப்பட்ட 123 உதவி பேராசரியர் பணி நியமனங்களுக்கு, கல்லுாரி கல்வி ஆணையர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார்.

பச்சையப்பன் அறக்கட்ளையின் கீழ், கடலுார் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, சென்னை பச்சையப்பன் கல்லாரி, சென்னை சி.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லுாரி, செல்லம்மாள் மகளிர் கல்லுாரி ஆகியவற்றில், காலியாக உள்ள 123 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏழு மாதங்களுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டது.

இந்த கல்லுாரிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என்பதால், பணி நியமனங்களுக்கான ஒப்புதல் பெற, உயர்கல்வி துறையின் அனுமதி கோரப்பட்டது. அரசு அனுமதி வழங்காததால், நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி, அரசு மீது அறக்கட்டளை அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், பணி நியமனத்தில் 34 பணியிடங்களில் இனச்சுழற்சி முறையாக பின்பற்றப்படாததை சுட்டிக்காட்டி, இதனால் அனைத்து பணி நியமனங்களும் பாதிக்கும் என்பதால் நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்க இயலாது என, கல்லுாரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி திருப்பி அனுப்பி உள்ளார்.

அதில், பொதுப்பிரிவு, பி.சி., - எம்.பிசி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளில் நிரப்பப்பட வேண்டிய பெண்களுக்கான இடத்திற்கு, ஆண்கள் நியமித்தது; மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டிற்கு சாதாரணமானர்களை நியமித்தது; பின்னிடைவு பணியிடங்களுக்கு புதிதாக நியமித்தது; முதுநிலை வரையில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளை இணைக்காதது; நீதிமன்ற தடையாணை பெற்ற வழக்கு முடியாமல் இருப்பது உள்ளிட்ட முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனால், ஏற்கனவே பணிபுரிந்த கல்லுாரிகளை விட்டு, நிரந்தர பணி என்பதால் இதில் சேர்ந்தவர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us