பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வரும் 19ல் விடுமுறை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வரும் 19ல் விடுமுறை
UPDATED : ஏப் 17, 2025 12:00 AM
ADDED : ஏப் 17, 2025 12:16 PM

சென்னை:
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, நாளை மறுதினம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும், 18ம் தேதி புனித வெள்ளி மற்றும், 20ம் தேதி ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
வெளியூர் செல்லும் கிறிஸ்தவ மத ஆசிரியர்கள், 19ம் தேதி சனிக்கிழமையன்று, விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதை அரசு ஏற்றுள்ளது.
அதன்படி, மேல்நிலை வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, நாளை மறுதினம் விடுமுறை அளிக்கும்படி, விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் லதா உத்தரவிட்டுள்ளார்.