sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவருக்கு பெற்றோரே நிஜ ஹீரோ

/

மாணவருக்கு பெற்றோரே நிஜ ஹீரோ

மாணவருக்கு பெற்றோரே நிஜ ஹீரோ

மாணவருக்கு பெற்றோரே நிஜ ஹீரோ


UPDATED : ஜன 26, 2026 12:09 PM

ADDED : ஜன 26, 2026 12:11 PM

Google News

UPDATED : ஜன 26, 2026 12:09 PM ADDED : ஜன 26, 2026 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: தாமரை குளோபல் அறக்கட்டளை சார்பில், 'ஒளிமயமான எதிர்காலம்' என்ற 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் நேற்று நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தென்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகளார் துவக்கி வைத்தனர்.

இதில் பங்கேற்றோர் பேசியதாவது,

பேராசிரியர் ராம சீனிவாசன்: சினிமா மாயையில் இருந்து வெளியேறி, பெற்றோரை நிஜ ஹீரோவாக பாருங்கள். குடும்பத்தினரை அவமதிக்கும் எந்த பழக்கமும் நமக்கு கூடாது.

நாம் உயர நமது தேசமும் உயர வேண்டும். தேசம் நன்றாக இருக்க நாம் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு தன் உயிர் கொடுத்து தேசத்தை காத்தவர்களை வரலாறு இன்றும் பேசப்படுகிறது.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே: தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக படியுங்கள். தேர்வுக்கு முந்தைய, 50 நாட்கள் மொபைல்போன், டிவி போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு படியுங்கள். வாரம் ஒருமுறையாவது கோவிலுக்கு செல்லுங்கள். மன அமைதி, நம்பிக்கை கிடைக்கும்.

கல்வியாளர் காயத்ரி: அனைவரும் பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று விழ வேண்டாம். உங்கள் பகுதி தொழில், வேலை வாய்ப்புக்களுக்கு தகுந்த படியான படிப்புகளை தேர்ந்தெடுங்கள்.

வேலை கொடுக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us