UPDATED : செப் 20, 2026 01:29 PM
ADDED : செப் 20, 2026 01:31 PM
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே, பாவை கல்வி நிறுவனங்களில் பாவை புதுமை படைப்பாக்க மையத்தின் சார்பாக, டெக்னோவா - 26 என்ற தொழில் முனைவு கருத்தரங்கம் நடந்தது.
பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். மஹேந்திரா அன்ட் மஹேந்திரா குழும தலைவர் முனைவர் வேலுசாமி, கிரசன்ட் இன்குபேசன் மற்றும் இன்னவேசன் மைய செயல் இயக்குநர் முனைவர். பர்வேஷ் அலாம் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பத் துறை இரண்டாமாண்டு மாணவர் நரேன் வரவேற்றார்.
பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார். இயக்குநர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன் வாழ்த்தி பேசினார். முனைவர். வேலுசாமி, பர்வேஷ் அலாம் ஆகியோர் பேசுகையில், 'தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக தன்னியக்க வாகன தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. நீங்கள் அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களாக,தொழில் முனைவோர்களாக உருவாக வாழ்த்துக்கள்,' என்று பேசினர்.
மின் மற்றும் தொடர்பு பொறியியல் மூன்றாமாண்டு மாணவி தரண்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தமோபஹா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன நிறுவனர் ஸ்ரீமதி.பாரதி சுப்ரமணியன், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் ராமசாமி, இயக்குநர் (ஆராய்ச்சி) முனைவர் கிருஷ்ணமூர்த்தி, பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளர் கமலா கிருஷ்ணமூர்த்தி, கிரசன்ட் இன்னவேசன் மைய குழுவினர், மகேந்திரா குழுமத்தின் குழுவினர் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
