UPDATED : செப் 20, 2026 01:31 PM
ADDED : செப் 20, 2026 01:32 PM
நாமக்கல்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், ஒன்றிய செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
ஒன்றிய தலைவர் ஜீவாஜாய் தலைமை வகித்தார். செயலாளர் சசிகுமார் வரவேற்றார். மாநில பொதுக்குழு நிர்வாகி ராஜேஸ்வரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் கோரிக்கை குறித்து விளக்கினர். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் இடைநிலை, தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ஊதிய அநீதி களைய வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறுதியின் படி, ஆசிரியர், அரசு ஊழியருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்.
கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், தனி சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
