முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வேறு தேதிக்கு மாற்ற மனு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு வேறு தேதிக்கு மாற்ற மனு
UPDATED : செப் 30, 2025 09:42 AM
ADDED : செப் 30, 2025 09:43 AM
கள்ளக்குறிச்சி :
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தேர்வர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு வரும் 12ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறைகள் மற்றும் போதுமான கால அவகாசம் இல்லாததால் போட்டி தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தேர்வர்களின் நலன் கருதி போதுமான கால அவகாசம் வழங்கவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நவம்பர் மாதத்தில் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதனால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். மனு மீதான விசாரணையில், கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே, எங்களது கோரிக்கையை ஏற்று கூடுதல் கால அவகாசம் வழங்கி தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.