UPDATED : ஆக 11, 2026 04:43 PM
ADDED : ஆக 11, 2026 04:45 PM
அ நிறம் | அளவு
கோவை:
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின், முதுகலை பாடப்பிரிவு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
பாஸ்டன் குழும நிறுவனங்களின் நிறுவனர் ராஜராஜன் பேசுகையில், “வணிகத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தனித்திறனோடு இவற்றை அணுக வேண்டும். வணிக திட்டங்கள் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
எதிர்கால மேலாளர்களாக உருவாகி வரும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி, கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் ஆழமான புரிதலைப் பெற வேண்டும்,” என்றார்.
கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்றார். நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன், அறங்காவலர் பட்டாபிராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
