UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 09:55 AM
சென்னை:
ராப்சோடி மற்றும் நாராயணா பள்ளி குழுமம் இணைந்து பை அப்ராக்சிமேஷன் தினத்தை மாணவர்களுடன் கொண்டாடியது.
இந்நிகழ்வின் மையமாக, திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் சிந்தனையில் உருவான வரிகளுடன், க்ரூ-வின் நிறுவனர் ஸ்ரீ அனில் ஸ்ரீனிவாசன் பை(Pi) பற்றிய ஒரு தனிப்பட்ட பாடலை இசையமைத்திருந்தார்.
நாராயணா பள்ளிகளின் பல்வேறு கிளைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஒவ்வொரு கிளையிலிருந்தும் இரு மாணவர்கள் என பலர் இப்பாடலை பாடி தொழில்முறை ஸ்டுடியோவில் பதிவு செய்தனர். ராப்சோடி ஆசிரியர்கள் இவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
ராப்சோடி, கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இசை மற்றும் கலை மூலம் முக்கிய பாடங்களை கற்பித்து வரும் ஒரு கலைக் கலவை திட்டமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 450க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களுக்கு பயிர்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.