UPDATED : செப் 29, 2026 03:06 PM
ADDED : செப் 29, 2026 03:06 PM
அ நிறம் | அளவு
கோவை:
பி.கே.தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் சர்வதேச கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டு ஆராய்ச்சி, உயர்கல்வி, கலாசாரப் பரிமாற்றம், சர்வதேச தொழில் வாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பிரிக்ஸ் பிளஸ் இந்திய பிரதிநிதி மிதாலி ட்ரோச்சின், ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் ட்ரோச்சின், பல்கலை இணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் டாக்டர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
