UPDATED : செப் 29, 2026 03:04 PM
ADDED : செப் 29, 2026 03:06 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
தமிழக சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தமிழ்நாடு கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளி ஆசிரியர்களுக்கும், அவர்கள் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் அக்., 1 வரை உறைவிட காலநிலை கல்வி பயிற்சி (கற்றல் பயிற்சி) 3 நாட்கள் நடக்கிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில் நடக்கும் பயிற்சிக்கு, 130 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சி.இ.ஓ., மான்விழி தலைமையில் ஈரோடு மற்றும் கோபியில் இருந்து நேற்று கிளம்பினர்.
