sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 2,298 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம்

2,298 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம்

2,298 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம்


UPDATED : மார் 13, 2025 12:00 AM

ADDED : மார் 13, 2025 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2025 12:00 AM ADDED : மார் 13, 2025 09:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,298 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளாத பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் பொது பிரிவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,298 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளோம்.

தாய் அல்லது தந்தையை இழந்து அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 5ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும்.

அரசு சார்பு மருத்துவ கல்வி நிறுவனங்கள், வேளாண் கல்லுாரி, கால்நடைக் கல்லுாரி அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிலுவையில் உள்ள ஊதியத்திற்கு கூடுதலாக ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்கள், பாப்ஸ்கோ மற்றும் பாசிக்கில் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கடன்களை திருப்பி செலுத்த ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகையை விரிவாக்கம் செய்ய, டில்லி வளர்ச்சி கழகத்திடம் இருந்த நிலம் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us