பிளஸ் 1 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 04:57 PM

சென்னை:
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள் நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு விடைத்தாள்களைப் பெற, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகல்களைப் பெறலாம்.
விடைத்தாள் பதிவிறக்கம் செய்த மாணவர்கள், மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை, அதே இணையதளத்தில் ஜூன் 11 முதல் ஜூன் 13 வரை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிடம் பணமாகக் கட்டணம் செலுத்தி, உரிய படிவங்களை ஒப்படைக்க வேண்டும்.
கட்டண விவரம்:
மறுமதிப்பீடு (ஒவ்வொரு பாடத்திற்கும்) -ரூ. 505
மறுகூட்டல்
உயிரியல் பாடத்திற்கு மட்டும்- ரூ.305
மற்ற பாடங்களுக்கு - ரூ.205