பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 04:43 PM

 சென்னை: 
கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை மாணவர்கள் இப்போது இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் முறை
விடைத்தாள் நகலை பெற்ற பிறகு, மறு மதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்திலேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் ஜூன் 5, 2025 காலை 11 மணி முதல் ஜூன் 7, 2025 மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுத்துறை அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.
கட்டண விவரம்
    கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற பாடங்கள்: ரூ. 505
    உயிரியல் பாடம்: ரூ. 305
    பிற பொதுப் பாடங்கள்: ரூ 205
மாணவர்கள் தங்கள் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு முழுமையான வழிகாட்டுதலையும் பெறலாம். 

