தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத்தேர்வு அதிகாரிகள் ஆலோசனை

பிளஸ் 2 பொதுத்தேர்வு அதிகாரிகள் ஆலோசனை

பிளஸ் 2 பொதுத்தேர்வு அதிகாரிகள் ஆலோசனை


UPDATED : பிப் 26, 2026 03:03 PM

ADDED : பிப் 26, 2026 03:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2026 03:03 PM ADDED : பிப் 26, 2026 03:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
மார்ச் 2ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வழித்தட அலுவலர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான ஆலோசனை கூட்டம், கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அருள்ஜோதி (தாராபுரம்), சித்ரா (திருப்பூர்), மணிமாறன் (தனியார் பள்ளிகள்), தேர்வுகள் துறை மாவட்ட அலுவலர் மணிவண்ணன், சர்வ சிக் ஷ அபியான் உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரி, தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் கணேசமூர்த்தி பேசியதாவது:

பொதுத்தேர்வு நடத்த ஒதுக்கப்பட்ட பணியை எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். தேர்வு நடத்தும் பணியில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்; ஏதேனும் புகார்கள் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு இன்று சென்று, ஆய்வு நடத்துங்கள். பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதி, தேர்வறை வசதிகளை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுடன் ஆலோசித்து தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வினாத்தாள் பிரிப்பு, மாணவ, மாணவியருக்கு வழங்குதல், விடைத்தாள் திரும்ப பெறுவது, சரியான நேரத்துக்கு 'பெல்' அடிப்பது உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரு நாள் முன்பாகவே தயாராக வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, பொதுத்தேர்வை நடத்துவது எப்படி என்பது குறித்து வழிகாட்டுதல், தெளிவுரை அடங்கிய கையேடு, கூட்டத்தில் பங்கேற்ற, தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட்டது.

'கேள்வி கேளுங்க!'


கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரி கணேசமூர்த்தி, “வழக்கமாக வழங்கப்படும் வழிகாட்டுதல் என அலட்சியப்படுத்தாமல், முழுமையாக படித்து பாருங்கள்.

ஏதேனும் புதிய உத்தரவு, அறிவுறுத்தல் இருந்தால், அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கேள்வி கேளுங்கள். இப்போதே பதில் அளிக்கிறேன்,” என்றார். பங்கேற்ற முதுகலை ஆசிரியர் சிலர், நேர மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பாக சில கேள்விகளை எழுப்ப, கணேசமூர்த்தி பதிலளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us