UPDATED : ஏப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.
பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே 14ம் தேதி வெளியானது. அதே தேதியில் இந்த ஆண்டும் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ள்ளோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் எரிந்ததால் முடிவுகளை வெளியிடுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. கடந்த ஆண்டைப் போலவே மே 31ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.