வெங்கையா நாயுடுவின் 3 புத்தகங்களை வெளியிட்ட பிரதமர் மோடி
வெங்கையா நாயுடுவின் 3 புத்தகங்களை வெளியிட்ட பிரதமர் மோடி
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான 3 புத்தகங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெளியிட்டார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
நெருக்கடி நிலையின் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது உண்மையான தோழர். அதிகாரம் என்பது சேவைக்கானது என்பதை, வாஜ்பாய் அரசுடன் சேர்ந்து பணியாற்றிய போது வெங்கையா நாயுடு நிரூபித்தார். அவர் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.